Monday, September 19, 2011

அண்ணா வாழி!!!





தரிசு நிலமாய் இருந்த தமிழ்பூமியை வளப்படுத்தியஅறிவு நதியே!

கரையைத்தேடும் அலைகளாக உன்னை தேடுகிறோம்

காந்தி சாலையில் நடப்பவர்கள் எல்லாம்
காந்திய வழியில் நடப்பவர்கள்அல்ல

உன் பெயரைச்சொல்லி சிலர்
இங்கே அரசியலில் அறுவடைசெய்து கொண்டு இருக்கிறார்கள்
துச்சாதனனா திரௌபதிக்குச்சேலை தரமுடியும்?
புலியா புள்ளிமான் குட்டிக்குப்பால் கொடுக்க முடியும்?

தமிழகத்தின் முற்பாதி நீ படைத்தாய்!
பிற்பாதி என் தம்பி படைப்பான் என்றாய்!!!
இங்கே வரலாறை கொள்ளும் காலம் துளிர்கின்றது!
நின் புகழ் பாட
ஆதவன் உதிக்கும் காலம் தொலைவிலில்லை
சூரியன் சுடரை காரிருள்  தான் மறைக்குமோ?
சூரியன் உதிக்கும் காலத்தில் செறுக்குற்ற
இலைகள் உதிரும்!
சூரியன் உதிக்கும்!

உம் பிறந்தநாளில் இதை சூளுரைப்போம்!!!
அண்ணா வாழி!!!



Saturday, September 17, 2011

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே?



எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே?



  “கனம் கோர்ட்டார் அவர்களே! என்னை நீங்கள் இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து வரவில்லை - இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள், நீதிபதியின் உத்தரவைக் காட்டிஎனது  பழைய  கதை எல்லாம் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் அறியாததா? நான் இந்தக் கேவலம், நீதி மன்றத்துக்கெல்லாம் வரலாமா? இரத்தினக் கம்பளத்திலே நடைபோட்ட என் பொற் பாதங்கள், இந்தக் கோர்ட்டின் தரையில் படலாமா? மிதிக்கலாமா? பாதம் நோகாதா? புண்பட்டுப் போகாதா? என் மூச்சும் பேச்சும் இந்தச் சுண்ணாம்புச் சுவர்களில் மோதலாமா? மோதிஎதிரொலிக்கலாமா? ஆகவே, மறுபடியும் எந்த நீதிபதி என்னைவா - வாஎன்று அழைத்தாலும், நான் ஓடுவேன் - ஓடுவேன் - ஓடுவேன் - வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுவேன்! இல்லை - இல்லை! இந்த பெங்களூரு கோர்ட்டின் எல்லையை விட்டே, என் மூதாதையர் வாழும் மைசூர் அரண் மனைக்கே ஓடுவேன்! புரிந்து கொள்ளுங்கள் - இன்று குற்றத்தைச் சாட்டுவோரே! சட்டத்தை  நீட்டுவோரே!”
- என்று ஏதோ ஆவேசம் வந்தவரைப்போல - மரத்தடி மேடையில் தனி ஆளாக நின்று கொண்டு - ஓங்கி வளர்ந்திருந்த மரத்தை நோக்கி - அப்படியும் இப்படியுமாக - கையை வீசி வீசி - 'பராசக்தி’, மனோகராதிரைப்படங்களின் உச்சகட்ட வசனத்தைப் போட்டுக் குழப்பி - கத்திக் கொண்டிருந்தார்

அய்யாசாமி என்று தன் பெற்றோர் சூட்டிய பெயரை, தன் கட்சித் தலைவியின்மேல் கொண்ட பற்றுதல் காரணமாக,'அம்மாசாமிஎன்று மாற்றிக் கொண்ட .தி.மு.. தொண்டர்!
அப்போது அங்கே வந்த நல்லதம்பி, அந்த 'கோர்ட் சீனைப் பார்த்து - ரசித்து - கை தட்ட - சுயநினைவு வந்தவரைப்போல் திரும்பிய அம்மாசாமி, தன்னை சமாளித்துக் கொண்டு, “வாங்க நல்லதம்பி - வாங்க!” என்று மரத்தடியில் உட்கார, அருகில் அமரும் நல்லதம்பி, அவரது முதுகைத் தட்டிக் கொடுத்து, “என்ன அம்மாசாமி! இந்த மரத்தடியையே பெங்களூரு நீதிமன்றமா மாத்திட்டீங்க? உங்கம்மா கோர்ட்டுக்குப் போனா - எப்படிப் பேசறதுன்னு ஒத்திகையா?” என்று கேட்க -
அம்மாசாமி: (தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே) பின்னே - எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே! எங்க அம்மாவுக்கும் புரியலே! வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கிலே, கீழ்க்கோர்ட் - மேல்கோர்ட் - செஷன்ஸ் கோர்ட் - ஹைகோர்ட் - சிறப்புக் கோர்ட் - எதுக்குமே போகாம சமாளிச்சிக் கிட்டே வந்துட்டாங்க, எங்கம்மா!
நல்லதம்பி: சமாளிக்கலே! சர்வ வல்லமை படைச்ச சட்டத்தையே, ஏதோ 'சாக்குப் போக்குகாரணங்களைச் சொல்லி - 'அழிச்சாட்டியம்பாங்களே - அதை எல்லாம் செய்து, இத்தனை நாள் - நாளா? தப்பு - தப்பு! 15 வருஷமா இழுத் தடிச்சாங்க, உங்கம்மா! வழக்கு விபரத்தைத் தமிழிலே கொடுத்தா, இங்கிலீஷிலே வேணும் பாங்க - இங்கிலீஷிலே கொடுத்தா, மொழி பெயர்ப்புல பிழை இருக்குன்னு சொல்லி, திருத்திக்கிட்டு வரச் சொல்லுவாங்க! இப்படியே நீதிமன்றங்களை எல்லாம் 'புட்பால் கிரவுண்டாமாத்தி - வழக்கை அங்கே இங்கே பாயுற பந்தா நினைச்சி - உதைச்சி - 'வாய்தா, வாய்தான்னு 130 தடவை வாய்தா வாங்கி - “தேர்தல் முடியட்டும் - முதலமைச்சரா ஆயிட்டா -தப்பு! 15 வருஷமா இழுத் தடிச்சாங்க, உங்கம்மா! வழக்கு விபரத்தைத் தமிழிலே கொடுத்தா, இங்கிலீஷிலே வேணும் பாங்க - இங்கிலீஷிலே கொடுத்தா, மொழி பெயர்ப்புல பிழை இருக்குன்னு சொல்லி, திருத்திக்கிட்டு வரச் சொல்லுவாங்க! இப்படியே நீதிமன்றங்களை எல்லாம் 'புட்பால் கிரவுண்டாமாத்தி - வழக்கை அங்கே இங்கே பாயுற பந்தா நினைச்சி - உதைச்சி - 'வாய்தா, வாய்தான்னு 130 தடவை வாய்தா வாங்கி - “தேர்தல் முடியட்டும் - முதலமைச்சரா ஆயிட்டா - இந்தக் கேஸைத் தூக்கி வங்காள விரிகுடாக் கடல்ல வீசி எறிஞ்சிடலாம்அப்படீன்னு காத்துக் கிட்டிருந்தாங்க! ஆனா - கோர்ட் விடமாட் டேங்குதே! துரத்திக்கிட்டே இருக்குதே! இப்ப, அவுங்க கோர்ட்டுக்கு நேரில் வந்துதான் ஆகணும்னு பிடிவாதம் பிடிக்குதே!
அம்மாசாமி: ஆமா - எங்கம்மா கேள்விகளை எழுதி அனுப்பினா, எழுத்து மூலமா பதிலைத் தெரிவிக்கிறேன்னு சொன்னாங்க! அப்புறம், 'வீடியோமூலமா பதில் சொல்றேன்னு சொன்னாங்க -
நல்லதம்பி: ஆமா - உலகத்துலேயே இல்லாத புதுமையா - வழக்கை தன் இஷ்டத்துக்கு வளைக்கலாம் - விசாரணையை 'கோலிவிளையாட்டு மாதிரி ஆக்கலாம் - தீர்ப்பையும் ஒத்தி வச்சிக்கிட்டே காலத்தை ஓட்டலாமுன்னு நினைச்சாங்க! நடக்கலியே! பொய்க் காரணங்கள் எல்லாம் காட்டுக்கெறிச்ச நிலவாப் போச்சே! கடல்ல கரைச்ச பெருங்காயமாப் போச்சே!
அம்மாசாமி: பொய் வழக்குதானே? எல்லாமே ஒருநாள் பொடிப் பொடியா ஆகப் போகுது பாருங்க! எங்கம்மா முதலமைச்சரா ஆகிறதுக்கு முன்னாடி, 1.7.1991லே, அவங்களே கொடுத்த கணக்குப்படி - 2 கோடியே 1 இலட்சத்து 83 ஆயிரத்து 947 ரூபாய்தானே அவுங்க சொத்து?
நல்லதம்பி: ஆமா - யார் இல்லேன்னது? ஆனா, 30.4.1996லே - ஐந்து வருஷ ஆட்சிக்குப் பிறகு - அந்தக் கணக்கு எப்படி 66 கோடியே 44 இலட்சத்து 73 ஆயிரத்து 623 ரூபாயா மாறிச்சு? எப்படிக் குட்டிப் போட்டுச்சி?
அம்மாசாமி: ஐயோ - அது பொய்க் கணக்கு!
நல்லதம்பி: அது பொய்யின்னு நிரூபிக்க வேண்டியதுதானே? கோர்ட்டுல 66 கோடிக்கு அதிகமா பெரிய 'லிஸ்ட்டே தாக்கல் செய்யப் பட்டிருக்கே! பட்டியல் வேணுமா? படிக்க மனசிருக்கா? படிக்க முடியுமா? ஒரே ரூபாய் சம்பளம் வாங்கினவங்கதானே உங்கம்மான்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களே - நீங்களே படிச்சுப் பாருங்க - இந்தாங்க!
- என்று சொல்லித் தயாராக வைத்திருந்த பெரிய பட்டியலை நல்லதம்பி நீட்ட, அம்மாசாமி அதை வாங்கிப் படிக்கிறார்:
1.ஜெயலலிதாவின் 775 நகைகள்-     5,41,14,624                                       
2.சசிகலாவின் 96 நகைகள்- 26,03,325
3.91 கைக் கெடிகாரங்கள் - 6,87,350 
 4.7 விலை உயர்ந்த கைக் கெடிகாரங்கள்-  9,03,000
5. 914 புதிய பட்டுச் சேலைகள்-  61,13,700
6. 6,195 மற்ற புதிய சேலைகள்-   27,08,720
7. 2,140 பழைய சேலைகள்-   4,21,870
8. 389 ஜோடி காலணிகள்-  2,00,902
9. 1116 கிலோ எடை வெள்ளிப் பாத்திரங்கள்- 48,80,000
10.இந்தியன் வங்கிஅபிராமபுரம் கிளை முதலீடு- 1,00,00,000
11.சொகுசுப் பேருந்து-   32,40,278


இவை தவிர, நிலங்கள் - கட்டிடங்கள் என்று எடுத்துக் கொண்டால், அவைகளின் விவரங்கள் பின்
வருமாறு:-
1.சென்னை - போயஸ் தோட்டம்-   8,00,000
2.அதில் கட்டப்பட்ட புதிய கட்டிடம்- 7,34,98,000
3.ஆந்திர மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டம், திராட்சைத் தோட்டம் -  5,40,33,901
4.ஜெயா பப்ளிகேஷன்ஸ், கணபதி காலனி, கிண்டி-  39,34,000
5.19, பட்டம்மாள் தெரு, சென்னை - 18-  8,00,000
6.மைலாப்பூர் கடைகள்-  1,87,000
7.11/, 3வது தெரு, பரமேஸ்வரி நகர்அடையார்-நிலம் மற்றும் கட்டிடம்- 30,00,000
8.18, 3வது தெரு, கிழக்கு அபிராமபுரம்நிலம் - மற்றும் கட்டிடம்-  43,00,000
9.கிண்டி தொழிற்பேட்டைநிலம் - மற்றும் கட்டிடம்- 79,54,650

இவை தவிர, ஜெயலலிதாவின் தோழி மற்றும் அவரது உறவினர்கள் பெயரால் உள்ள சொத்துக்களின் விவரம் வருமாறு:-
1.பையனூர் கிராமத்தில் உள்ள சொத்து - எட்டு மனைகள்-1,40,90,761
2.கொடநாடு, தேயிலைத் தோட்டம்தொழிற்சாலை - கோத்தகிரி - 7,60,00,000
3.சிறுதாவூர் கட்டிடம் - 5,48,92,598
4.நீலாங்கரைக் கட்டிடம் - 80,75,000
5.எண்.66, 24-வது தெரு,அண்ணாநகர் - கட்டிடம்- 2,48,37,592
6.21, பத்மநாபன் தெரு -தியாகராயநகர் கட்டிடம்- 49,43,000
7.68/69, அபிபுல்லாசாலை கட்டிடம்-  90,00,000
8.149 - 150 டி.டி.கே.சாலை  முதல்குறுக்குத் தெரு, சென்னை-18-  1,11,59,000
9.சிங்காரவேலன் தெரு -நீலாங்கரைக் கட்டிடம்- 15,00,000
10.ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்,ஈக்காட்டுத்தாங்கல் நிலம் -கட்டிடம்இயந்திரங்- 2,97,84,457
11.எண்.3/178 - சி. வெட்டுவாங்கேணிநிலம் - மற்றும் கட்டிடம்- 1,56,90,076
12.சோளிங்கநல்லூர் கிராமம்,நிலம் - மற்றும் கட்டிடம்- 82,87,000
13.1/240 ஈஞ்சம்பாக்கம், புதியமகாபலிபுரம் சாலைக் கட்டிடம்-  58,86,000
14.சோளிங்கநல்லூர் கிராமம், ப்ளாட் 1,சன்ரைஸ்  அவென்யூ- 5,70,200
15.சோளிங்கநல்லூர் கிராமம்ப்ளாட் 1, சன்ரைஸ் அவென்யூ- 14,35,600
16.1 மார்பி தெரு, அக்கரை கிராமம்நிலம் - மற்றும் கட்டிடம்-  33,43,959
17.5, முருகேசன் தெரு, தியாகராயர்நகர் மனை - மற்றும் கட்டிடம்-  39,92,828
18.பிளாட் மற்றும் கட்டிடம் -1/1 லஸ்அவென்யூ (5 கிரவுண்ட்)-   1,30,00,000
19.கல்யாண மண்டபம், 41 - 42 ராஜாகார்டன் தெரு, அரும்பாக்கம்-53,51,000
இப்படியாக -
7288 கிலோ நகைகள்41 'ஏசிஇயந்திரங்கள்10,500 சேலைகள்91 தங்கக் கைக்கடிகாரங்கள் ஒரு சொகுசுப் பேருந்து
- இந்த நீண்ட பட்டியலை - தன்னுடைய அம்மாவின் 'பவிசைப் படித்து முடித்த அம்மா சாமிஅப்பாடாஎன்று பெருமூச்சுவிட -
நல்லதம்பி: அதாவது, உங்கம்மா 1991லே சொன்ன கணக்கு 2 கோடிதான் - அதுதான் 1996லே 66 கோடியா வளர்ந்திருக்கு! இந்த கணக்குதான் கோர்ட்டுல வழக்கா போடப் பட்டிருக்கு! “இந்தக் கதை எப்படிம்மா நடந்தது? பொய்யின்னா நேரா வந்து வது, உங்கம்மா 1991லே சொன்ன கணக்கு 2 கோடிதான் - அதுதான் 1996லே 66 கோடியா வளர்ந்திருக்கு! இந்த கணக்குதான் கோர்ட்டுல வழக்கா போடப் பட்டிருக்கு! “இந்தக் கதை எப்படிம்மா நடந்தது? பொய்யின்னா நேரா வந்து நிரூபிங்கன்னு நீதிபதிகள் சொன்னா - கோர்ட் என்னவோ Ôபாம்புப் புற்றுமாதிரி பயப் படுறாங்க, உங்கம்மா! இப்ப சட்டசபையிலே வேறே புதுசா ஒரு கணக்கு சொல்லி இருக் காங்க - 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 939 கோடி ரூபாய்தான் - தன் சொத்துன்னு!
அம்மாசாமி: ஆமா - நானும் படிச்சேன்! எனக்கு ஒண்ணுமே புரியிலே! ஒரே குழப்பமா இருக்கு! என்ன கணக்குக் காட்டினாலும், கோர்ட் விடாது போலிருக்கே! விடாம துரத்துதே! ஆனா, எங்கம்மாநான் தமிழக முதலமைச்சரா இருக்கிற காரணத்தாலும், மற்றும் வேறு காரணங்களாலும் கோர்ட்டில் ஆஜராக முடியலே!” அப்படீன்னு சொல்லி இருக்காங்களே!
நல்லதம்பி: ஆனா, டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாங்களே, உங்கம்மா - அந்த நீதிபதிகள் என்ன சொல்லி இருக்காங்க - தெரியுமா?
குற்றம் சாட்டப்பட்டவர்கள், கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்பது சட்டத்தின் நியதியாகும்! விசாரணையைத் தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளார்! இதை ஏற்றுக் கொள்ள முடியாது! கிரிமினல் நடைமுறைச் சட்டம் பிரிவு 313-ன்படி, ஜெய லலிதா கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும். அதற்கு விலக்கு அளிக்க முடியாது! எப்போது ஆஜராக முடியும் என்று அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் (அதாவது 12.9.2011க்குள்) பதில் கூறவேண்டும்!”
- அப்படீன்னு கண்டிப்பா சொல்லிட் டாங்களே! என்ன செய்யப் போறாங்க, உங்கம்மா?
- என்று நல்லதம்பி கேட்க, “அது... அது... வந்து... வந்து...” என்றபடியே மரத்தடியை விட்டு அம்மாசாமி கீழே இறங்க -
நல்லதம்பி: இப்ப 'மலைக் கள்ளன்ங்கிற படத்துல உங்க தலைவர் எம்.ஜி.ஆர். பாடின ஒரு பாட்டுதான் என் நினைவுக்கு வருது!
      எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்      இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே?
- என்று பாடியபடியே நல்லதம்பி திரும்பிப் பார்க்க, அம்மாசாமி வேகவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்!





என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா!